12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் தொடங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
முதலில் கோவாக்ஸின் மற்றும் கோவில் சில்டு கொரோனா தடுப்பூசிகள் 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு கொண்டிருந்தது.
பின்னர் இந்த ஆண்டு ஜனவரி முதல் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து தற்போது 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வரும் மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.