பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவு செய்வார் - அமைச்சர் செங்கோட்டையன்
10 மற்றும் 12 அல்லாத வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார் - சிவகங்கையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் பட்டது இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12 அல்லாத வகுப்புகளுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டபொழுது "10 மற்றும் 12 அல்லாத வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் தான் முடிவு எடுப்பார்." என்று அவர் கூறினார்.