பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது அதில் பெற்றோர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவிப்பதற்காக அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறி முறைகளின் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகள்
- முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அரசு அறிவிக்கும் நாள் முதல் திறக்கப்படும்.
- பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும்.
- ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் தொகுதிகள் பிரிக்க வேண்டும்.
- இணையவழி மற்றும் தொலைதூர கற்றல் தொடரும்.
- பள்ளிக்கு வருவதை விட மாணவர்கள் இணைய வழியாக கற்க விரும்பினால் அனுமதிக்கலாம். (பெற்றோர் அனுமதியுடன்)
- பெற்றோர்களின் எழுத்துப்பூர்வமான இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
- மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது அது பெற்றோர்கள் சம்மதம் சார்ந்த இருக்க வேண்டும்.
- உணவுப் பொருள் குடிநீர் முக கவசம் போன்றவை மாணவர்களிடையே பரிமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- உடற்கல்வி,விளையாட்டு பாடவேளை மற்றும் NCC,NSS,JRC மற்றும் SCOUT போன்றவைக்கு அனுமதி இல்லை.
- வகுப்பறையில் இருக்கை ஏற்பாடு செய்யும் போது குறைந்தபட்சம் இருக்கைகளுக்கு இடையே 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும்.
- ஆசிரியர்கள் பணியாளர்கள் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணி வேண்டும்.
- ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.
- ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தொட்டுணர் (BIOMETRIC) வருகை பதிவு இல்லை பள்ளி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD SCHOOL REOPEN GUIDE LINES
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடவும்