பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்
கொரோனா குறித்து வாய் திறக்க வேண்டாம்
தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை
பள்ளிகள் திறப்பு தொடர்பாக நாளை நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் கொரோனா குறித்து வாய் திறக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
ஆனால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதையடுத்து பெற்றோர்களின் அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் இந்த கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்துவது குறித்து அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கலந்துகொண்ட தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
நாளை நடைபெறும் கருத்து கேட்புக் கூட்டத்தை காலை 11 மணிக்கு நிறைவு செய்த 12 மணிக்குள் பள்ளிகளிலிருந்து அறிக்கைகளை அனுப்ப வேண்டும்.
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களின் வருகை பதிவேடு கூட்டம் நடந்ததற்கான சிடி பதிவுகள் தலைமை ஆசிரியரின் அறிக்கை அரசு உதவி பெறும் பள்ளி ஆக இருப்பின் செயலாளர்களின் அறிக்கை மற்றும் பெற்றோர்களின் ஓட்டுமொத்த ஆகியவற்றை தவறாமல் சிஇஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூட்டத்தை எந்தவித சர்ச்சை மற்றும் புகாருக்கு இடமில்லாத வகையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கொரோனா பாதிப்பு பரவும் விதம் இதுவரை நடந்துள்ள உயிரிழப்பு என குறித்த எதையும் ஆசிரியர் தரப்பில் இருந்து பேச வேண்டாம்.
மேலும் பள்ளிகள் திறந்ததால் ஆந்திரா ஒடிசா கர்நாடகத்தில் நடந்த பாதிப்பு குறித்தும் எந்தவித ஆலோசனைகளும் நடத்த வேண்டாம் பெற்றோரிடம் இருந்து தற்போது பள்ளிகளை திறக்கலாம் அல்லது திறக்க வேண்டாம் என ஒன்றை பதிலை மற்றும் கருத்தாக பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.