பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தை பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவிப்பு
தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதற்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு வரும் நவம்பர் 9ஆம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் அனைத்துப்பள்ளிகளிலும் நடைபெறும் என்று அறிவித்தது.
அந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றவர்களின் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்தை அங்கு கூறலாம் என்று அரசு அறிவித்தது நேரில் சென்று கருத்தை கூற இயலாதவர்கள் கடிதம் மூலமாகவும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.