தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் மெட்ரிக் பள்ளிகள்,சிபிஎஸ்இ ,ஐசிஎஸ்இ,ஐஜிசிஎஸ்இ பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வராத அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.