தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடியாது என்று சென்னை  உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது போல  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரி பத்தாம் வகுப்பு மாணவரின் தந்தை  தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதிலளித்துள்ளது ,  அந்த பதில் மனுவில் 

⭐ அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

⭐ செப்டம்பர் இறுதியில் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடக்கிறது அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

⭐ பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களைப் போல பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள்  அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

Post a Comment (0)
Previous Post Next Post